வவுனியாவின் புதூர் புகையிரத வீதிக்கு அருகில் துப்பாக்கி, ரவைகள் மற்றும் கைக்குண்டுகளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு உதவி புரிந்ததாக தெரிவித்து மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதூரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கிடைத்த தகவலுக்கு அமைய மீரிகம மற்றும் வெயாங்கொடை பகுதிகளில் வைத்து குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 14 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 402 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது எனவும் கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் பெறுமதி 50 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமென மதிப்பிடப்பட்டுள்ளது எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, இராஜகிரிய , மீரிகம, மற்றும் வெயாங்கொடை பகுதிகளைச் சேர்ந்த 26 முதல் 45 வயதிற்கு இடைப்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த 6 சந்தேகநபர்களையும் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
Add Comment