Home இலங்கைமாலியில் கொல்லப்பட்ட இராணுவ வீரர்களின் உடல்களைக் கொண்டு வருவதில் தாமதம் :

மாலியில் கொல்லப்பட்ட இராணுவ வீரர்களின் உடல்களைக் கொண்டு வருவதில் தாமதம் :

by admin

மாலியின் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படைப்பிரிவில் பணியாற்றிய இலங்கை இராணுவத்தினர் இருவரின் உடல்களை நாட்டிற்கு கொண்டு வருவதில் மேலும் தாமதம் ஏற்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

உடல்களை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான விமான ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கலே இதற்கான காரணமென இராணுவ ஊடகப்பேச்சாளர், பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து தெரிவித்துள்ளார். குறித்த இராணுவத்தினரின் உடல்கள் இன்று மாலை நாட்டிற்கு கொண்டுவரப்படும் என இதற்கு முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த 25 ஆம் திகதி மாலியின் டுஎன்ட்ஸா பகுதியில் இலங்கை இராணுவத்தினரின் ட்ரக் வண்டி மீது தொலைதூரத்திலிருந்து அதி நவீன மற்றும் அதிசக்தி வாய்ந்த தாக்குதல் நடத்தப்பட்டதில் இருவர் கொல்லப்பட்டதுடன் 6 இராணுவ உத்தியோகத்தர்கள் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More