தற்காலிக ஜனாதிபதியாக பிரகடனம் செய்துள்ள வெனிசுலாவின் எதிர்க்கட்சித்தலைவரும் பாராளுமன்ற சபாநாயகருமான ஜூவான் கெய்டோவை வெனிசுவேலாவின் இடைக்கால ஜனாதிபதியாக சில ஐரோப்பிய நாடுகள் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளன.
பிரான்ஸ், ஜெர்மனி, பிரித்தானியா மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் தங்களது நிலைப்பாட்டை மாற்றியமைத்து இவ்வாறு அங்கீகரித்துள்ளன. புதிதாக தேர்தலை நடத்துமாறு ஐரோப்பிய ஒன்றியம் விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ நிராகரித்ததையடுத்து சில நாடுகள் இவ்வாறு கூட்டு முடிவு எடுத்துள்ளன.
அமெரிக்கா மற்றும் சில லத்தீன் அமெரிக்க நாடுகள் ஏற்கனவே கெய்டோவை ஆதரித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.இதேவேளை ஐரோப்பிய நாடுகளின் முடிவை, வெனிசுலாவின் உள் விவகாரங்களில் அயல்நாடுகளின் தலையீடு என விமர்சித்துள்ள மதுரோவின் முக்கிய ஆதரவு நாடான ரஸ்யா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வெனிசுலாவில் அதிகாரத்தை பிடுங்கப்பார்ப்பதாக கண்டனம் வெளியிட்டுள்ளது.