142
மட்டக்களப்பு, கொக்ட்டிச்சோலை காவல் நிலையத்துக்கு புதிய பொறுப்பதிகாரியாக காவற்துறைப் பரிசோதகர் எம்.ஐ.அப்துல் வஹாப் நியமிக்கப்பட்டுள்ளார். கொக்கட்டிச்சோலை காவல் நிலையப் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய ஐ.பி.சிசிர பண்டார, சில தினங்களுக்கு முன்னர் 25,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின்கீழ், இலஞ்ச ஒழிப்பு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே, 30 வருடங்கள் காவற்துறை சேவையில் அனுபவமிக்கவரும் மட்டக்களப்பு மாவட்ட பிரதிக் காவற்துறை மா அதிபர் அலுவலகத்தில் கடமையாற்றியவருமான வஹாப் நியமிக்கப்பட்டுள்ளார்.
Spread the love