ஊடகங்களில் வெளியான தவறான செய்தியினால் தாம் மிகுந்த மனவுளைச்சலுக்கு உள்ளகியுள்ளதாக யாழ்.போதனா வைத்திய சாலை தாதியர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் நேற்றைய தினம் வெளியான செய்தியினால் தம் மீது அவதூறு ஏற்பட்டு உள்ளது என தெரிவித்து தாதியர்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினை முன்னேடுத்தனர். அதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தனர். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,
வைத்திய சாலையில் பணியாற்றும் தாதியர்கள் தொடர்பில் தவறான செய்தி ஒன்று வெளியிடப்பட்டு இருந்தது. அந்த செய்தியினால் வைத்திய சாலையில் பணியாற்றும் அணைத்து தாதியர்களும் மானவுளைச்சளுக்கு ஆளாகியுள்ளனர். குறித்த செய்தியினால் தாதியர்களுக்கு தலைகுனிவு ஏற்பட்டு உள்ளது. சமூகத்தின் தவறான பார்வைகள் தாதியர்கள் மேல் விழுந்துள்ளன.
வடக்கில் உள்ள ஒரு போதனா வைத்திய சாலை இதுவே. இங்கே ஏற்கனவே பல குறைபாடுகள் காணப்படுகின்றன. தாதியர் பற்றாக்குறைகள் காணப்படுகின்றன. அந்நிலையில் இவ்வாறான செய்திகள் வெளி வந்துள்ளதால் தாதியர் சேவைக்கு வர விரும்புவோர்கள் தயக்கம் காட்டுவார்கள்.
அவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றால் அது தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்தப்பட வேண்டும். என்பதில் எமக்கு மாற்று கருத்தில்லை ஆனால் தாதியர்கள் என பொதுமை படுத்தி செய்தி வெளியானமையால் இங்கு பணியாற்றும் அனைத்து தாதியர்களையும் அந்த செய்தி பாதித்துள்ளது என தெரிவித்தனர்.