160
யாழ்.விசேட நிருபர்
போலி நாணயத்தாள்கள், கஞ்சா பீடிகளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டுக்களில் மூன்று இளைஞர்களை வல்வெட்டித்துறை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வல்வெட்டித்துறை பகுதியில் 1000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் இரண்டை தமது உடமையில் வைத்திருந்தார் என ஒருவரையும் , கஞ்சா பீடியினை நுகர்ந்தார்கள் எனும் குற்றசாட்டில் இரு இளைஞர்களையும் வல்வெட்டித்துறை காவல்துறையினர் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கரணவாய் மற்றும் வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் மூவரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
Spread the love