டுபாயில் வைத்து அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட, இலங்கையின் பிரபல போதைப்பொருள் வர்த்தகரான மாக்கந்துர மதுஷ் உள்ளிட்ட சந்தேகநபர்களிடம் டுபாய் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணைகளில், காவல்துறை விசேடப் படையணியின் அதிகாரிகள் சிலரும் காணப்படுவதாகவும் இதன்போது, பல தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும், பாதாள உலகக் குழுவின் தலைவரான மாகந்துரே மதுஷ் என்றழைக்கப்படும் சமரசிங்க ஆரச்சிகே மதுஷ் லக்ஷித்த உள்ளிட்ட 25 பேர், டுபாயில் அந்நாட்டுக் காவல்துறையினரால் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love
Add Comment