அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவரான ஸ்டீவன் ஸ்மித், எதிர்வரும் உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஷஸ் தொடரை மனதில்கொண்டே, இம்முடிவு எடுக்கப்படலாமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்தாண்டு தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியின் போது பந்தைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டுக்காக, ஸ்மித் மற்றும் வோர்னர் ஆகியேருக்கு விதிக்கப்பட்ட ஓராண்டுத் தடை அடுத்த மாதத்துடன் நிறைவடைகின்றன.
அவுஸ்திரேலிய அணியின் அண்மைக்காலப் பின்னடைவுகளைத் தொடர்ந்து, ஸ்மித்தும் வோர்னரும், அவுஸ்திரேலியாவின் உலகக் கிண்ண அணியில் முக்கியமான வீரர்களாகக் கருதப்படுகின்றனர்
எனினும் ஸ்மித்துக்கு மேற்கொள்ளப்பட்ட முழங்கைச் சத்திரசிகிச்சை காரணமாக அவர் உலகக் கிண்ணத்துக்குச் சற்று முன்னதாகவே, அவர் குணமடைவாரென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் ஆஷஸ் தொடருக்கான அணியில் அவர் இடம்பெறுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
உலகக் கிண்ண நடப்புச் சம்பியனான அவுஸ்திரேலியா, தமது முக்கிய வீரர்களில் ஒருவரை, உலகக் கிண்ணத்தில் பங்குபற்றாமல் ஆஷஸில் பங்குபற்ற அனுமதிக்குமாக இருந்தால், மிக முக்கியமான விடயமாக காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.