Home இலங்கைதாலிக் கொடி அறுத்தவருக்கு விளக்கமறியல்

தாலிக் கொடி அறுத்தவருக்கு விளக்கமறியல்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தினுள் நின்ற பெண்ணின் 7 பவுண் தாலிக் கொடியை அறுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவரை வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவற்றுறைக்குப் பயணிப்பதற்காக பேருந்து நிலையத்தில் இருந்த பெண்ணின் தாலிக்கொடியை அறுத்துக் கொண்டு, ஓடித் தப்ப முயன்ற கொள்ளயரை பயணிகள் சிலரும் முச்சக்கர வண்டிச் சாரதிகளும் இணைந்து துரத்திச் சென்று வெலிங்டன் சந்தியில் மடக்கிப் பிடித்து பேருந்து நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டு கட்டிவைத்து நடையப்புடைக்கப்பட்டிருந்தார்.

அத்துடன், பெண்ணிடம் அபகரித்த தாலிக்கொடியும் மீட்கப்பட்டதுடன் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் கொள்ளையரைக் கைது செய்து விசாரணைக்குட்படுத்தினர்.

இந்நிலையில் சந்தேகநபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று புதன்கிழமை முற்படுத்தப்பட்ட நிலையில் வழக்கை விசாரித்த நீதிவான் ஏ.எஸ்.பி.போல், சந்தேகநபரை வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More