ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்குக்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் இரண்டு மாதங்களில் மரண தண்டனையை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி நேற்றையதினம் பாராளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்தியபோதே தெரிவித்தமை தொடபிலேயே இவ்வாறு கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மனித உரிமை மீறல் விவகாரங்களையும் உள்ளடக்கிய கொள்கை ரீதியான கலந்துரையாடல்கள், இலங்கை அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்படுவதாக கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதரகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
எந்தச் சூழ்நிலையிலும், மரணதண்டனை நிறைவேற்றப்படக் கூடாது என்னும் உறுதியான நிலைப்பாட்டில் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்