188
பேட்ட திரைப்படத்தில் நடிகை சிம்ரன் மற்றும் திரிஷா இணைந்து நடித்து பெரும் பாராட்டை பெற்றுள்ள நிலையில், தற்போது, சனந்த் என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் புதிய திரைப்படம் ஒன்றிலும் இணைந்து நடிக்கவுள்ளனர்.
ஜோடி திரைப்படத்தில் சிம்ரனின் தோழியாக அறிமுகமானவர் திரிஷா. 20வருடங்களுக்கு முன்னர், அதாவது 1999ஆம் ஆண்டு வெளியான அந்த படத்தில் திரிஷாக்கு மிகவும் சின்ன வேடம் வழங்கப்பட்டது. ஆனால் அதன் பின் கதாநாயகியாக அறிமுகமாகி 16 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக நடித்து வருகின்றார்.
திருமணமாகி சினிமாவில் இருந்து ஒதுங்கிய சிம்ரன் சில படங்களில் அக்கா, அண்ணி வேடங்களில் நடித்தார். பின்னர் நடிப்பதை தவிர்த்துக் கொண்டார். இந் நிலையில் அண்மையில் ரஜினிகாந்துக்கு நாயகியாக பேட்ட திரைப்படத்தில் நடித்து மீண்டும் கவனத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளார்.
‘பேட்ட’ திரைப்படத்தில் திரிஷா தன்னுடன் இணைந்து நடிக்கவில்லை என்ற குறையை, தனது அடுத்தபடத்தில் தீர்க்க உள்ளார் சிம்ரன். அதாவது இருவேறுபட்ட காட்சிகளில் இப் படத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் இருவரும் இணைந்து ஒரு சண்டை மற்றும் சாகச படத்தில் நடிக்கவுள்ளனர். புதுமுக இயக்குநர் சனந்த் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love