உள்நாட்டுப் போர் நடைபெறும் ஏமனுக்கு ஆயுதம் வழங்குவதை நிறுத்துமாறு சர்வதேச மன்னிப்புச்சபை கோரியுள்ளது. இதுகுறித்து சர்வதேச மன்னிப்புச்சபை அறிக்கையில் உள்நாட்டுப் போர் நடைபெறும் ஏமனில் சண்டையிடும் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதை பிரித்தானியாவும் அமெரிக்காவும் நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
இங்கு நினைத்துப்பார்க்க முடியாத இன்னல்களை மக்கள் சந்தித்து வருகின்றனர் என்பதுடன் இது அந்த நாட்டின் மக்கள் தொகைக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஏமனில் சன்னி பிரிவைச் சேர்ந்த ஜனாதிபதி மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் போராளிகளுக்குமிடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் ஜனாதிபதி மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவூதி அரேபியாவும் ஹவுத்தி போராளிகளுக்கு ஈரானும் ஆதரவு வழங்கி வருகின்றன.
ஏமன் அரசுடன் இணைந்து சவூதி தாக்குதல்களினை மேற்கொள்வதற்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது