165
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறி சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருந்த இந்திய பிரஜைகள் 09 பேர் நுவரெலிய, பொரலந்தை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். செல்லுபடியான விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. 24 மற்றும் 42 வயதுகளுக்கு இடைப்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். 09 பேரும் இன்று நுவரெலிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love