நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் பிரபல இயக்குனர் பாலா இயக்கிய வர்மா திரைப்படத்தை கைவிடுவதாகவும், மீண்டும் திரைப்படத்தை இயக்கவுள்ளதாகவும் அதில் பாலா இயக்குனர் இல்லை என்றும் படத்தை தயாரித்துள்ள நிறுவனம் நேற்று அறிவித்திருந்தது.
இதன் பின்னணி குறித்து இவ்வாறு கூறப்படுகின்றது. முதலில் படத்தை மறு உருவாக்கம் செய்ய இயக்குனர் பாலா விரும்பவே இல்லை என்றும் அவரை கட்டாயப்படுத்தி தான் சம்மதிக்க வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. அத்துடன் வர்மா படத்தின் கதையில் பாலா பல மாற்றங்கள் செய்து தனித்துவமாக மாற்ற முற்பட்டதே சிக்கலை உருவாக்கியதாகவும் கூறப்படுகின்றது.
இசையமைப்பாளராக இளையராஜாவை ஒப்பந்தம் செய்யலாம் என்று சொன்னபோதும் விக்ரம் அதை நிராகரித்து அர்ஜுன் ரெட்டி தெலுங்கு படத்தின் இசையமைப்பாளர் ரதனை ஒப்பந்தம் செய்ய வலியுறுத்தியதாகவும் முழு படத்தையும் பார்த்த விக்ரமுக்கும், அவரது மகன் துருவ்வுக்கும் திருப்தி இல்லை என்றும் கூறப்படுகின்றது.