குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாதிரி கிராம திட்டத்திற்கமைவாக மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட தெரிவு செய்யப்பட்ட மூன்று கிராமங்களில் புதிய வீட்டுத் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (9) காலை இடம் பெற்றது.
தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மன்னார் மாவட்ட முகாமையாளர் ஜே.நோயல் ஜெயச்சந்திரன் தலைமையில் குறித்த வீட்டுத்திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வக்கு -எனினும் அழைக்கப்பட்ட அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட வசந்தபுரம் கிராமத்தில் அமைக்கப்படவுள்ள 24 வீடுகள், பட்டித் தோட்டம் கிராமத்தில் அமைக்கப்படவுள்ள 26 வீடுகள் மற்றும் மன்னார் சின்னக்கடை பகுதியில் அமைக்கப்படவுள்ள 18 வீடுகளுக்கு ஆரம்ப கட்டமாக அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் சஜித் பிரேமதாசாவின் எண்ணக்கருவில் நாடளாவிய ரீதியில் 2500 மாதிரிக் கிராமம் அமைக்கப்படவுள்ள நிலையில் குறித்த வீட்டுத்திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இவ்வாறு இடம் பெற்றுள்ளது.