170
கிராமிய வறுமை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாகவுள்ள சட்டவிரோத மதுபானத்தை முழுமையாக ஒழிப்பதற்குத் தேவையான நிகழ்ச்சித்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தமது அதிகார எல்லைக்குள் சட்டவிரோத மதுபானங்கள் இருக்குமாயின் அப்பிரதேசத்திற்கு பொறுப்பான காவல்துறைப் பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட காவல்துறை அதிகாரியும் முழுமையாக பொறுப்பு கூறவேண்டும் என்ற புதிய சுற்றுநிரூபமொன்று அடுத்தவாரம் வெளியிடப்பட உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்
பொலநறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
Spread the love