இலங்கை கிழக்கு கடல் எல்லைப்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் ஏழு பேரை கடற்படையினரினால் நேற்றையதினம் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
புல்மோட்டை, கோக்குதுடுவாய் பகுதிக்கு கிழக்கு கடலில் கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே இவர்களை கைது செய்யப்பட்டதுடன் அவர்களின் மீன்பிடி படகொன்றும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படை கப்பல் பட்டறைக்கு கொண்டுசெல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை உதவி கடற்றொழில் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது