கடந்த வாரம் டுபாயில் கைதுசெய்யப்பட்ட பாதாளக் குழுவின் தலைவரும் பிரபல போதை வர்த்தகருமான மாக்கந்துர மதுஷ் உள்ளிட்ட 39 சந்தேகநபர்களை இன்றைய தினம் டுபாய் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டுபாயில் உள்ள பிரபல விடுதியொன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது மதுஷ் உள்ளிட்ட 31 பேரும், விடுதிக்கு வெளியில் வைத்து 14 பேரும் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களின் சிறுநீர், இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, அவர்கள் போதைப் பொருள் பயன்படுத்தியுள்ளமை உறுதியாகியிருந்தது.
இதனையடுத்து குறித்த பரிசோதனையின் பின்னர் 6 பேர் வடுவிக்கப்பட்டிருந்த நிலையில் ஏனைய 39 பேரும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love
Add Comment