பாலா இயக்கி கைவிடப்பட்ட ‘வர்மா’ திரைப்படத்தை, மீண்டும் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான விக்ரமை ‘சேது’ என்ற திரைப்படம் நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தியவர் இயக்குனர் பாலா.. சேது திரைப்படத்துடன் பாலா இயக்கிய ‘பிதாமகன்’ படம், இவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுக் கொடுத்தது.
இந்த நிலையில் வர்மா திரைப்படத்தை வேறு ஒரு இயக்குனரை வைத்து, மீண்டும் ஆரம்பத்தில் இருந்து இயக்கவுள்ளதாக தயாரிப்பாளர் கூறினார். கௌதம் மேனன் இந்த திரைப்படத்தை இயக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கதாநாயகனாக துருவ் நடிக்க,ஏனைய அனைத்து நடிகர் மற்றும் நடிகைகளும் மாற்றப்படவுள்ளனர்.