179
வவுனியா சாம்பல் தோட்டம் பகுதியில், ஒரு மாதக் குழந்தை ஒன்று தாய்ப்பால் புரக்கேறியதால் மரணமடைந்துள்ளது. பிறந்து ஒருமாதம் ஆன, ரங்கநாதன் ரவீனன் என்ற ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
வவுனியா சாம்பல் தோட்டம் பகுதியில் வசித்து வரும் இளம் குடும்பம் ஒன்றின் குழந்தை பசியால் அழுத நிலையில், தயார் குழந்தைக்கு பாலுட்டியுள்ளார். இதன்போது எதிர்பாராத விதமாக குழந்தைக்குப் புரக்கேறியுள்ளதனையடுத்து வவுனியா வைத்தியசாலைக்கு குழந்தையை கொண்டு சென்றபோதும் சிகிச்சை பலனளிக்காது குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love