முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ உள்ளிட்ட ஏழு பேருக்கெதிரான வழக்கை விசாரணை செய்யாமல் நிராகரிக்குமாறு கோரி தாக்கல் செய்த மனுவை கொழும்பு விசேட நீதாய மேல் நீதிமன்றம் இன்றையதினம் நிராகரித்துள்ளது.
கடந்த அரசாங்கத்தின் போது, டீ.ஏ.ராஜபக்ஸ அரும்பொருட் காட்சியகத்தை நிர்மாணிப்பதற்காக, அரச நிதியிலிருந்து சுமார் 34 மில்லியன் ரூபாயை தவறான முறையில் பயன்படுத்தினார்கள் என குற்றம் சுமத்தப்பட்டு கோத்தாபய உள்ளிட்ட ஏழு பேருக்கெதிராக, சட்ட மா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை நிராகரித்த நீதிமன்றம், இந்த வழக்கை விசாரிக்க, தமக்கு அதிகாரம் உள்ளதெனவும் அறிவித்துள்ளது