Home இலங்கைபடைப்புழுவின் தாக்கம் கட்டுபடுத்தப்பட்டது – சோளப் பயிர்ச்செய்கையில் ஈடுபடலாம்…

படைப்புழுவின் தாக்கம் கட்டுபடுத்தப்பட்டது – சோளப் பயிர்ச்செய்கையில் ஈடுபடலாம்…

by admin

படைப்புழுவின் தாக்கம் கட்டுபடுத்தப்பட்டுள்ளதாகவும் எனவே விவசாயிகள் வழமை போல் சோளப் பயிர்ச்செய்கையில் ஈடுபடலாம் எனவும் விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுமார் 82,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த சோளத்தில் 5 சதவீதமே படைப்புழுவின் தாக்கத்தால் அழிவடைந்துள்ளதெனவும் தற்போது படைப்புழுவின்; தாக்கம் கட்டுபடுத்தப்பட்டுள்ளதெனவும் தெரிவித்துள்ள விவசாயத் திணைக்களம் சோள உற்பத்திக்காக புதிய முறைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் சோளச் செய்கைகளுக்கிடையில் 4 அடி இடைவெளி இருக்க வேண்டுமென்பதுடன், சோளக் கன்றுகளுக்கிடையில் 30 -45 சென்றிமீற்றர் இடைவெளி இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ள திணைக்களம் இதன்மூலம் படைப்புழுவின் தாக்கத்தை குறைத்துக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More