271
1980களிலிருந்து இன்றுவரையில் நகைச்சுவை நடிப்பில் தனக்கான இடத்தை தக்க வைத்திருப்பவர் செந்தில். அவருடன் கவுண்டமணி. இருவரும் இணைந்து நடித்த நகைச்சுவைக் காட்சிகள் இன்றுவரையில் தொலைக்காட்சிகளிலும் இணையத்தளங்களிலும் பிரபலமாயுள்ளன.
அன்றைய நாட்கள் குறித்து நினைவுகூர்ந்த நடிகர் செந்தில், வெறும் ஐயாயிரம் ரூபா சம்பளத்துடன் நடிக்கத் தொடங்கி மக்களின் மனதில் இடம்பிடித்ததுவே பெரிய மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார். இந்தியாவின் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேர்காணல் அளித்த செந்தில், தனது நடிப்பு வாழ்வில் கவுண்டமணி இணைபிரியாத பாத்திரம் என்றும் தெரிவித்துள்ளார்
இன்று இலட்சம் சம்பளம் பேசப்பட்டபோதும் அன்று ஐந்தாயிரம் சம்பளம் எடுத்து லட்சம் ரசிகர்களை பெற்ற நிலை இல்லை என தெரிவித்த செந்தில். டிஜிட்டல் சினிமா இன்று எடுக்கப்படுகின்றது . அன்று பிலிம்ரோலில் சினிமா எடுக்கப்பட்டபோது, அதிக தடவை நடித்து யார் பிலிம்ரோலை வீணாக்குவது என்று தயாரிப்பாளர் கவனிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்
வைதேகி காத்திருந்தாள் என்ற திரைப்படத்தில் வரும் பெட்ரோமாக்ஸ் காட்சியும் படமாக்கப்பட்ட சுவாரசியமான அனுபவத்தையும் அவர் நினைகூர்ந்தார். “எப்படிண்ணே இதுல எரியுது என்று கேட்டு ஒரே டேக்கில் உடைத்தேன். இயக்குனர், தயாரிப்பாளர், கவுண்டமணி ஆகிய எல்லோருக்குமே மகிழ்ச்சி.” இவ்வாறு கூறும் நடிகர் செந்தில், அந்த காட்சி இன்றைக்கும் பேசப்பட நான் மட்டுமே காரணம் அல்ல. கவுண்டமணி அண்ணனும் தான்’ என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
Spread the love