Home இலங்கைஅரவிந்த்சாமியின் புதிய திரைப்படம் கள்ளபார்ட்:

அரவிந்த்சாமியின் புதிய திரைப்படம் கள்ளபார்ட்:

by admin

ராஜபாண்டியின் இயக்கத்தில் அரவிந்த்சாமி  மற்றும் ரெஜினா கசாண்ட்ரா நடித்துள்ள கள்ளபார்ட் திரைப்படத்தை எதிர்வரும் ஏப்ரல் மாதம் வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளது.
விங் பிரேம்ஸ் என்ற திரைப்பட நிறுவனத்தின் பெயரில் எஸ்.பார்த்தி, எஸ்.சீனா இணைந்து தயாரிக்கும் கள்ளபார்ட் திரைப்படத்தில் அரவிந்சாமியுடன் ஹரிஷ் பெராடி, ஆதேஷ், பாப்ரிகோஷ், ராட்சசன் புகழ் பேபி மோனிகா போன்ற பலரும் நடிக்கின்றனர்.

சண்டையுடன் கூடிய திகில்  திரைப்படமாக உருவாகும் இந்த படத்தை இயக்கும் ராஜபாண்டி  கூறுகையில்,
அரவிந்த்சாமி எவ்வளவோ படங்களில் நடித்திருக்கிறார். அவருக்கு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை சிறப்பித்து விடக் கூடியவர். இதில் அதிபன் என்கிற ஹார்ட்வேர் கதாபாத்திரம். நாம் என்ன சொல்கிறோமோ அதை அப்படியே உள்வாங்கி பிரதிபலிப்பார். அது திரையில் இன்னும் பிரமிப்பை ஏற்படுத்தும்படி இருக்கிறது. ரெஜினா டான்ஸ் டீச்சர் வேடம் ஏற்றிருக்கிறார். படப்பிடிப்பு வேகமாக வளர்ந்து வருகிறது. ஏப்ரல் மாதம் படத்தை திரைக்கு கொண்டு வர உள்ளோம் என்றார்.

அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More