பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானுக்கு உதவ தயாராக இருப்பதாக சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடி காணப்படுவதனால் சர்வதேச நிதியத்திடம் பெற்ற கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய நெருக்கடியில் உள்ளது.
அந்நாட்டின் அன்னியச்செலாவணியின் கையிருப்பு 8.12 பில்லியன் டொலர்கள் மாத்திரமே கையிருப்பில் உள்ள நிலையில் இது சர்வதேச நிதியம். மற்றும் உலக வங்கி நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச அன்னியச்செலாவணி கையிருப்பை விட குறைவான தொகை ஆகும்.
ஆத்துடன் இந்த தொகை, 7 வார கால இறக்குமதிக்குத்தான் போதுமானதாக உள்ளதன் காரணமாக பாகிஸ்தானுக்கு கடன் வழங்க உலக வங்கியும், ஆசிய வளர்ச்சி வங்கியும் மறுத்து விட்டன.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு சீனாவும சவூதி அரேபியாவும் நிதி உதவியாக வழங்க முன்வந்த போதிலும் பாகிஸ்தான் பொருளாதர நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான சூழல் ஏற்படவில்லை.
இந்த நிலையில், துபாயில் நடைபெற்று வரும் சர்வதேச மாநாட்டில் பற்கேற்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டின் லகார்டேவை சந்தித்து பேசியுள்ளார்.
இந்ப பேச்சுவார்த்தையின் போது பாகிஸ்தானில் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க கட்டமைப்பு சீர்திருத்தங்களை மோற்கொள்வதில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது என இம்ரான்கான் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தந்த சீர்திருத்தங்கள் நாட்டை நிலையான வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் எனவும் பாதிப்படைந்துள்ள துறைகள் அனைத்தும் பாதுகாக்கப்படும எனவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை பாகிஸ்தானை பொருளாதார பின்னடைவில் இருந்து மீட்க அந்நாட்டிற்கு உதவ சர்வதேச நாணயநிதியம் தயாராக உள்ளது என கிறிஸ்டின் லகார்டே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.