மெக்ஸிகோவில் கடந்த 9 வருடங்களில் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுக்களுக்குள்ளான 152 பாதிரியார்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒன்பது வருடங்களில் மட்டும் 152 கத்தோலிக்க பாதிரியார்கள் சிறார்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்காக தேவாலயத்திலிருந்து நீக்கப்பட்டு அவர்களில் சிலர் சிறை தண்டனை பெற்றுள்ளனர் என மெக்ஸிகோ தேவலாயம் ஒன்றின் பேராயர் ஒருவர் தெரிவித்துள்ளார். முன்னர் சில பாதிரியார்களும் பேராயர்களும் பாலியல் பலாத்காரச் செயலில் ஈடுபட்டுள்ளனர் என போப் பிரான்சிஸ் தெரிவித்திருந்தார்.
அத்துடன் கடந்த வருடம் 2018-ல், கேரள கன்னியாஸ்திரி ஒருவர் பேராயர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியதை அடுத்து, இந்தப் பிரச்சினை பெரிதானது.
இதனைத் தொடர்ந்து தேவாலயங்களில் பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபடும் பாதிரியார்களுக்கு எதிரான நடவடிக்கைகள் உலக அளவில் அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.