நைஜீரியா ஜனாதிபதி முகமது புஹாரி தலைமையில் நடந்த பிரசார பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 14 பேர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் படுகாயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முகமது புஹாரியின் 4 ஆண்டு பதவிக்காலம் முடிவடைவதையொட்டி, நைஜீரியாவில் எதிர்வரும் சனிக்கிழமை பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இதில் தற்போதைய ஜனாதிபதி புஹாரி மீண்டும் போட்டியிடுவதுடன் அவருக்கு எதிராக முன்னாள் துணை ஜனாதிபதி போட்டியிடவுள்ளார்.
இந்த நிலையில், தேர்தலை முன்னிட்டு ஜனாதிபதி முகமது புஹாரி தலைமையில் பிரசார பேரணி நடத்தப்பட்ட போது ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி சுமார் 14 பேர் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது