ஐ.நா. மனித உரிமைகள் சபையின் உறுப்புரிமை நாடுகளின் பட்டியலில் இருந்து அமெரிக்கா வெளியேறியுள்ள நிலையில், பிரிட்டன், ஜேர்மனி, கனடா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து இலங்கைக்கு எதிரான புதிய தீர்மானத்தைத் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச தெரிவிக்கின்றார்.அந்த நாடுகளின் இராஜதந்திரிகள் கொழும்பில் தங்கியிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் தமது நிகழ்ச்சி நிரலை அவர்களிடம் கையளித்துள்ளதாகவும் தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாக மகிந்த ராஜபக்ச, இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த விடயம் தொடர்பில் ரணில் தலைமையிலான அரசு மௌனம் காப்பதாகவும், போர்க்குற்றத்தை தம்மீதும், இராணுவம்மீதும் திருப்பிவிட்டு, தப்பித்துக் கொள்வதே ரணில் அரசின் முயற்சி என்று கூறியுள்ள மகிந்த ராஜபக்ச, தாம் ஐ.நா தீர்மானங்களை கண்டு அஞ்சப் போவதில்லை என்றும் அதனை இலங்கையில் நடைமுறைத்த அனுமதிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பெங்களுர் நகரில், இந்திய ஆங்கில பத்திரிகை ஒன்றின் மாநாட்டில் பங்கு பற்றச் சென்றிருந்த, மகிந்த ராஜபக்ச இன்று மதியம் நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.