உலக வங்கியின் தெற்காசியப் பிராந்தியத்திற்கான உப தலைவர் ஹார்ட்விக் ஸ்காபர் கொழும்புக்கு வந்துள்ளார். உலக வங்கியின் உப தலைவரின் இலங்கைக்கு வந்திருப்பது இதுவே முதலாவது தடவையாகும். நேற்றையதினம் இலங்கை வந்துள்ள அவர் இங்கு மூன்று தினங்கள் தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் அபிவிருத்தி மற்றும் சீர்திருத்தங்களுக்கு உலகவங்கி எவ்வாறு ஆதரவளிக்க முடியும் என்பது தொடர்பில் கவனம் செலுத்துவதற்காக இலங்கை வந்துள்ள அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர இராஜாங்க நிதி அமைச்சர் எரான் விக்கிரமரட்ண, கொழும்பு மேயர், இலங்கை மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி மற்றும் சிரேஸ்ட அரசாங்க அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது