மகிந்த ராஜபக்ச தரப்பினரால் அரசாங்கத்தின் வரப்பிரசாதங்களின்றி வாழ முடியாது என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார். இவர்கள் மக்களுக்கு சேவை செய்வதற்காக ஆட்சிக்கு வரவில்லை என்றும் இவ் வரப்பிரசாதங்களின்றி இருக்க முடியாது என்பதனாலேயே ஆட்சியை கைப்பற்ற முயல்வதாகவும் அவர் கூறினார்.
அத்துடன் கூட்டு எதிர்கட்சியில் உள்ளவர்கள், கடந்த இருபது வருடங்களாக அரசியலில் இருந்துள்ளபோதும், அவர்கள் வறிய மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முன்வரவில்லை என்றும், ராஜபக்ச குடும்பத்தினருக்கு தேவையான அரசியல் அதிகாரங்களை அதிகரிக்கும் செயற்பாடுகளையே முன்னெடுத்திருந்ததாகவும் தலதா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இருபது வருடங்களாக ஆட்சியில் இருந்து செய்ய முடியாத விடங்களை கடந்த மூன்றாண்டு ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரள குறிப்பிட்டுள்ளார். இன்று இரத்தினபுரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.