168
மார்வெல் சீரியஸ் இயக்குனம் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் என்ற திரைப்படத்திற்கு தமிழ் திரையுலகின் பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வசனம் எழுதவுள்ளார்.
சர்கார் படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ், ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். இதற்கிடையில், பிரபல ஹொலிவுட் திரைப்படமான அவெஞ்சர்ஸ் படங்களின் தொடர்ச்சியாக தயாரிக்கப்படவுள்ள அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படத்துக்கு முருகதாஸ் வசனம் எழுதவுள்ளார்.
இதுகுறித்து இயக்குனர் முருகதாஸ் கூறுகையில்,
‘எனக்கு எப்போதுமே அவெஞ்சர்ஸ் கதைகள் மிகவும் பிடிக்கும். நாடே எதிர்பார்க்கும் ஒரு படத்துக்கு தமிழில் வசனம் எழுதுவதில் மகிழ்ச்சி. என் மகன் ஆதித்யாவுக்கு தான் இதற்கு நன்றி சொல்லவேண்டும். அவர் கேட்டுக் கொண்டதால் தான் இதை ஒப்புக்கொண்டேன். உலக புகழ்பெற்ற சூப்பர்மேன் கதாபாத்திரங்கள் என் வசனத்தை பேசப்போகிறார்கள். முடிந்தவரை தமிழ் ரசிகர்கள் படத்தோடு தங்களை இணைக்கும் வகையில் வசனங்கள் இருக்கும்’ எனத் தெரிவித்தார்.
Spread the love