கடந்த வருடம் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வவுனதீவில் கடமையிலிருந்த போது கொலைசெய்யப்பட்ட காவல்துறை அதிகாரி கனேஷ் தினேஷின் மூத்த சகோதரிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் அரசாங்க நூலக உதவியாளர் நியமனம் வழங்கப்பட்டது.
இன்று (15) முற்பகல் தெஹியத்தகண்டிய, நுவரகல மகா வித்தியாலய விளையாட்டரங்கில் இடம்பெற்ற மகாவலி காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வு மற்றும் மகாவலி விவசாய பாராட்டு, பரிசளிப்பு விழாவில் வைத்து இந்த நியமனம் ஜ வழங்கி வைக்கப்பட்டது.
வவுனதீவில் கடமையில் இருந்த போது கொலைசெய்யப்பட்ட காவல்துறை அதிகாரி இந்திக்க பிரசன்னவின் குடும்ப நலன்பேணலுக்காகவும் ஜனாதிபதியினால் இதற்கு முன்னர் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.