கிளிநொச்சி மாவட்டத்தின் பொதுச் சந்தையின் நிரந்தர கட்டடத்திற்கு முதலில் 150 மில்லியன் ரூபாவுக்கான திட்டம் தயாரிக்கப்பட்டிருந்தது பின்னர் அது 767 மில்லியன் ரூபாக்களில் புதிய திட்டமாக மாற்றப்பட்டிருந்து.
சந்தைக்கான நவீன புதிய திட்டத்தை நகர அபிவிருத்தி அதிகார சபையினர் மேற்கொண்டிருந்தனர். வரையப்பட்ட புதிய திட்டம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து 150 மில்லியன் ரூபாக்களில் இருந்து 767 மில்லியன் ரூபாவாக அதிகரிக்கக்கப்பட்ட விடயம் தொடர்பில் அமைச்சரவை நகர அபிவிருத்தி அதிகார சபையினரிடம் விளக்கம் கோரியிருக்கிறது.
இதற்கான விளக்கம் நகர அபிவிருத்தி அதிகார சபையினரால் அமைச்சரவைக்கு வழங்கப்பட்டு அமைச்சரவை அதனை ஏற்றுக்கொள்ளும் இடத்தே வரவு செலவு திட்டத்திற்கு ஊடாக நிதி ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான கருத்துப் பரிமாற்றம் நேற்று(15) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் பிரதமர் தலைமையில் இடம்பெற்ற அபிவிருத்தி மீளாய்வு கூட்டத்தின் போதே மேற்கொள்ளப்பட்டது. இச் சந்தர்ப்பத்தில் மேற்படி விளக்கம் அளிக்கப்பட்டது.
எனவே நகர அபிவிருத்தி அதிகார சபையினர் 767 மில்லியனுக்கான விளக்கத்தினை அமைச்சரவைக்கு அனுப்பி வைத்து அதனை அமைச்சரவை அங்கீகரித்தால் மட்டுமே அடுத்து வருகின்ற வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படும் அதுவும் ஒரே வரவு செலவு திட்டத்தில் முழுத் தொகையும் ஒதுக்கப்படாது எனவே கிளிநொச்சி பொதுச் சந்தைக்கான நிரந்தர கட்டடம் என்பது இப்போதைக்கு சாத்தியமற்ற ஒன்றாகவே காணப்படுகிறது.