Home சினிமா தணிக்கை செய்யப்பட்ட எனை நோக்கி பாயும் தோட்டா!

தணிக்கை செய்யப்பட்ட எனை நோக்கி பாயும் தோட்டா!

by admin


கௌதம் மேனனின் இயக்கத்தில் தனுஷ் மற்றும் மேகா ஆகாஷ் நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்திற்கு தணிக்கை நிறைவு செய்யப்பட்டமைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியதாக தயாரிப்பாளர் மதன் கூறியுள்ளார்.

தனுஷ் நடிப்பில் அடுத்ததாக ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ விரைவில் வெளியாகவுள்ளது. நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்த நிலையில், படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. அண்மையில் படம் தணிக்கைக்கு அனுப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியதாக தயாரிப்பாளர் மதன் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள இந்த படத்தில், தனுசுடன் மேகா ஆகாஷ், சசிகுமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தை மிக விரைவில் திரைக்கு கொண்டு வரும் முயற்சியில், படக்குழு ஈடுபட்டுள்ளது.

ஏப்ரல் மாத கோடை விடுமுறையில் இத் திரைப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு தர்புகா சிவா இயமைத்துள்ளார்.  தனுஷ் தற்போது, வெற்றிமாறன் இயக்கத்தில் `அசுரன்’ படத்தில் நடித்து வருகிறார். ராம்குமார், துரை செந்தில்குமார் இயக்கத்திலும் அடுத்தடுத்து நடிக்கிறார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். அத்துடன் வரலாற்று படமொன்றையும் இயக்கி நடிக்கிறார்.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More