Home இலங்கைஅனுராதபுரத்தில் புலிகளின் தொப்பியும், வெடிபொருட்களும் மீட்பு என்கிறார்கள்!

அனுராதபுரத்தில் புலிகளின் தொப்பியும், வெடிபொருட்களும் மீட்பு என்கிறார்கள்!

by admin

அநுராதபுரம் தயாகம பகுதியில், தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சினை பொறிக்கப்பட்ட தொப்பிகள் மற்றும் வெடி பொருட்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நகர சபை குப்பை சேகரிக்கும் நிலையத்திற்கு அருகிலேயே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர். நேற்று மாலை குப்பை கூளத்தினை சுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு, குறித்த தொப்பி மற்றும் வெடிமருந்துங்கள் சிக்கியுள்ளன.

காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, விடுதலைப் புலிகளின் இலட்சினை பொறிக்கப்பட்ட தொப்பி மற்றும் துப்பாக்கி ரவைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அரசியல் நோக்கம் கருதியே இவ்வாறு குப்பைகளுடன் குறித்த பொருட்கள் வீசப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக அநுராதபுரம் காவல் நிலையத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More