192
புதியஅரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகின்றபோதும், இன்னமும் தாம் செய்த அபிவிருத்தி திட்டங்களையே பிரதமர் ரணிலும் அமைச்சர்களும் திறந்து வைப்பதாக முன்னாள் ஜனாதிபதியும் எதிர்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வெயாங்கொடை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு, உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அத்துடன் இன்றைய நாட்களில், மிகவும் மந்தகதியான முறையிலேயே திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் மகிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட எந்தவொரு அபிவிருத்தித் திட்டங்களையும் மக்களால் காண முடியாது என்று தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ச, ஐக்கிய தேசிய கட்சியுடன் பயணிக்க முடியாது என்பதை விளங்கிக் கொண்டதாலேயே ஜனாதிபதி தன்னுடன் இணைந்து கொண்டதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
Spread the love