Home பிரதான செய்திகள்தென் ஆப்பிரிக்காவுக்கெதிரான முதலாவது டெஸ்ட்டில் இலங்கை வெற்றி

தென் ஆப்பிரிக்காவுக்கெதிரான முதலாவது டெஸ்ட்டில் இலங்கை வெற்றி

by admin


இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.  நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்ததன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்சில் 235 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

44 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 259 ஓட்டங்களை பெற்று அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இரண்டாவது இன்னிங்சில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் இலங்கை அணி வீரர் குசல் ஜனித் பெரேரா ஆட்டமிழக்காமல் 153 ஓட்டங்களை பெற்று டெஸ்ட் அரங்கில் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More