166
பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களின் இலவச தபால் வசதிகள் கொடுப்பனவை அதிகரிப்பது தொடர்பான அதி விசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்காக வருடத்துக்கு வழங்கப்பட்டு வந்த 1,75,000 ரூபாய் இலவச தபால் கொடுப்பனவு 3,50,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேப்போல் மாகாண சபை உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்பட்டு வந்த 24,000 ரூபாய் 48,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தபால் சேவைகள், முஸ்லிம் மத அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீமின் கையெழுத்துடன் இந்த வர்த்தமான அறிவித்தல் வெ ளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love