குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர் புத்திக பத்திரன நேற்று (16) சனிக்கிழமை மாலை மன்னாருக்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த நிலையில் அவர் மன்னார் மாந்தை உப்புக்கூட்டுத்தாபனத்தினை நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார்.
மன்னார் மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத்திற்கு சென்ற கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர் புத்திக பத்திரன அங்குள்ள நிலமையினை நேரடியாக அவதானித்தார்.
மேலும் உப்புக்கூட்டுத்தாபனத்தின் முகாமையாளர் உற்பட அதிகாரிகளை சந்தித்து உரையாடியதோடு,அங்குள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பிரதி அமைச்சர் உறுதியளித்துள்ளார்.