இலங்கை சென்றுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்றையதினம் பல்வேறு மட்டங்களினான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
206 மில்லியன் அமெரிக்க டொலருக்கான கடன் வரையறைக்காலத்தைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பிலான தீர்மானத்தை எட்டுவதற்காகவே சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள், இலங்கை சென்றுள்ளனர். இந்தநிலையில் இன்றையதினம் அவர்கள் இலங்கை மத்திய வங்கி, திறைச்சேரி மற்றும் நிதியமைச்சு ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தைகளின் பின்னரே, இலங்கைக்கு கடன் வழங்குவதற்கான வரையறைக்கால இயலுமை தொடர்பில், பரிந்துரைக்கப்படவுள்ளதாகதகவல்கள் வெளியாகி உள்ளன.
இதேவேளை சர்வதேச நாயணய நிதியம், இலங்கைக்கு வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்திருந்த கடன் வசதிகளில், நான்கு வரையறைக்காலங்கள் நிறைவடைந்துவிட்ட நிலையில் ஐந்தாவது வரையறைக்காலம் கடந்த ஒக்டோபர் மாதம் இலங்கையில் ஏற்பட்டிருந்த அரசில் குழப்பங்கள் காரணமாக பிற்போட்டிருந்தது. இந்நியிலேயே அது குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கை சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது