பாகிஸ்தானில் சிறையில் உள்ள இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி ஐ.நா. சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகின்றது.
இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரியான குல்பூஷண் ஜாதவ் பாகிஸ்தானுக்கு எதிராக சதி வேலைகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. புலனாய்வுப்படையினரால் கடந்த 2016 ஆண்டு பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
அவர் மீதான வழக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பினை எதிர்த்து நெதர்லாந்தில் உள்ள ஐ.நா சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த 10 நீதிபதிகள் அமர்வு, குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்ற தடை விதித்தது.
பல்வேறு கட்ட விசாரணைக்குப் பிறகு இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அடுத்த சில மாதங்களில் இவ்வழக்கில் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.