பெண்கள் எங்கே செல்கிறார்கள் என்பதைக் கண்காணிக்க கைத்தொலைபேசி செயலி ஒன்றை சவூதி அரேபியா உருவாக்கியுள்ளமை தொடர்பில் மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதன்மூலம் சவூதி ஆண்கள் தங்கள் வீட்டுப் பெண்கள், பெண் பிள்ளைகள் எங்கே செல்கிறார்கள், வருகிறார்கள் என்பதைக் கண்காணிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
இந்த செயலியானது பெண்களுக்கு எதிரான அடக்குமுறையைத் தூண்டுவதால் அப்பிள், கூகுள் ஆகிய நிறுவனங்கள் இந்த குறிப்பிட்ட செயலிகளை தங்கள் இயங்குதளங்களில் இருந்து நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
எனினும் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள சவூதி அரசு, இந்த செயலியானது பெண்கள், வயதானவர்கள், உடல் சவால் கொண்டவர்கள் என்று அனைத்து தரப்பு மக்களுக்குமே உதவியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இதன்மூலம் கடவுச்சீட்டு விசா உள்ளிட்டவற்றை புதுப்பித்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டிருப்பதே இதன் சிறப்பம்சம் எனவும் சவூதி அரசு தெரிவித்துள்ளது.
1 comment
முஸ்லிம் பெண்கள் எப்படி வீட்டிற்கு வெளியே நடந்து கொள்ள வேண்டுமென்ற விதிமுறைகள் இஸ்லாமிய கோட்பாட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளது. சமூக சீர்திருத்தத்திற்காகவோ அல்லது யாருக்குமோ அதனை மாற்ற முடியாது. அவர்கள் ஆண்களின் கட்டுப்பாபட்டில்த்தான் எப்போதும் வாழ வேண்டும். இரு பாலாரின் உடலமைப்பில் பாரிய வேறுபாடுகள் இருக்கின்றன. எனவே தயவுசெய்து முஸ்லிம் பெண்களை அப்படியே விட்டுவிடுங்கள். இஸ்லாமிய வழிமுறைக்கு அமைவாக எப்படி வாழ வேண்டுமென்று எவரும் அவர்களுக்கு பாடம் எடுக்கத் தேவையில்லை.