154
அண்மையில் நடிப்பிற்கு வந்து, பெரும் வரவேற்பை பெற்றுள்ள சிவகார்த்திகேயன், மிஸ்டர் லோக்கல் என்ற திரைப்படத்தில் நடித்து, அத் திரைப்படம் வெளியீட்டுக்கு காத்திருக்கும் நிலையில், தற்போது புதிய திரைப்படத்திற்கான பூசையில் இன்று கலந்துகொண்டுள்ளார்.
முக்கியமான படங்களை தேர்ந்து நடித்து வந்த, சிவகார்த்திகேயன் கனா என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளரானார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ரியோவை நாயகனாக கொண்டு திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தை கார்த்திக் வேணுகோபாலன் இயக்கி வருகிறார்.
இதில் ரியோவுடன் ஆர்ஜே விக்னேஷ், நாஞ்சில் சம்பத், ராதாரவி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணிக் குரல் பதிவுப் பணிகள் தொடங்கி இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் பூஜையுடன் தொடங்கிய பின்னணிக் குரல் பணிகள் பற்றிய புகைப்படங்களையும் படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.
Spread the love