170
கமல், விஜய், அஜித் ஆகியோரை வைத்து, மாறுபட்ட திரைப்படங்களை இயக்க விருப்பம் உள்ளதாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். அத்துடன் அஜித்தை வைத்து நகைச்சுவைப் படம் ஒன்றை உருவாக்க ஆசை கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா போன்றவர்கள் தமக்கான தனித்துவ சினிமாப் பாணியைக் கொண்டுள்ளனர். அவர்களை இயக்கும் இயக்குனர்களும் அந்தந்த நடிகர்களுக்கு ஏற்பவே கதையை உருவாக்குகின்றனர்.
விஜய்சேதுபதி நடித்த பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி என மாறுபட்ட கதை அம்சம் கொண்ட படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் தனது பாணியிலிருந்து முற்றிலும் மாறி முழுக்க ரசிகர்கள் ரசனைக்கு ஏற்ப ரஜினியின் ‘பேட்ட’ படம் இயக்கியுள்ளார்.
பொங்கலையொட்டி வெளியான இத் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் கமல், விஜய், அஜித் ஆகியோரை வைத்து, ‘என்னவிதமான படங்களை இயக்குவீர்கள்?’ என்றதற்கு .இயக்குனர் பதில் அளித்தார்.
இதுபற்றி அவர் கூறும்போது, ’கமலை வைத்து வரலாற்று சிறப்பம்சம் கொண்ட படத்தையும் விஜய்யை வைத்து ஹாங்க்ஸ்டர் படத்தையும் அஜித்தை வைத்து நகைச்சுவைப் படத்தையும் இயக்குவேன்’ என்றார்.
Spread the love