தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் விஜய், அஜித் இருவருமே நட்புடன் பழகி வரும் நிலையில், விஜய்யின் நடனத்தை பார்த்த அஜித் அதனைப் பாராட்டியுள்ளார்.
விஜய், அஜித் இருவரும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக உள்ளனர். இவர்களது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் யார் திரைத் துறையில் செல்வாக்கு மிக்கவர் என சண்டையிட்டுக் கொண்டிருக்க, அவர்கள் இருவரும் நட்புடனேயே உள்ளனர்.
இதுகுறித்து நடிகரும், ஆர்.ஜே.வுமான நடிகர் ரமேஷ் திலக் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘’நான் அஜித் சாருடன் நடித்துவிட்டேன். விஜய் சாருடன் ஒரு படமாவது நடித்துவிட வேண்டும். அவர்கள் இருவரும் நண்பர்களாகவே உள்ளனர்.
‘விஸ்வாசம்‘ படப்பிடிப்பின் போது கேரவனில் நானும் அஜித் சாரும் அமர்ந்திருந்தோம். அப்போது தொலைக்காட்சியில் விஜய் சாரின் பாட்டு ஓடியது. அதைப் பார்த்த அஜித் சார், விஜய் ஒரு பிறவி நடனக் கலைஞர். சர்வ சாதாரணமாக ஆடுகிறார் என்று புகழ்ந்தார். இருவரும் ஒருவரையொருவர் அவ்வளவு பாராட்டிக் கொள்கிறார்கள்’’ என்று கூறியுள்ளார்.

Spread the love
Add Comment