காஸ்மீரின் புல்வாமாவில் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில் 40 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டமைக்கு இதற்குப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய்ஷ்-எ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாருக்குத் தடை விதிக்க ஐநாவிடம் வலியுறுத்த பிரான்ஸ் முடிவெடுத்துள்ளது. ஐ.நா.விடம் 2வது முறையாக பிரான்ஸ் இத்தகைய வலியுறுத்தலை முன் வைக்கவுள்ளது.
2017-ல் பிரித்தானியா , பிரான்ஸ் ஆதரவுடன் பாகிஸ்தானில் செயல்படும் இந்த பயங்கரவாத அமைப்பின் தலைவருக்கு தடை விதிக்கும் கோரிக்கையை முன்வைத்த போதும் இந்த முன்மொழிவை சீனா தடுத்திருந்தது.
இந்தநிலையில் பயங்கரவாதிகள் பட்டியலில் மசூத் அசாரைச் சேர்க்க ஐநா.வில் பிரான்ஸ் முன்மொழிவை இன்னும் 2 நாட்களில் மேற்கொள்ளும் என பிரான்ஸ் நாட்டின் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.