பொகவந்தலாவ காவல்துறைப்பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ டின்தோட்டபகுதியில் 100வருடம் பழமை வாய்ந்த 15ம் இலக்க லயன் குடியிருப்பு ஒன்று தாழ் இறங்கும் அபாயம் காணபட்டுள்ளதால் குறித்த லயன் குடியிருப்பில் வசித்து வசித்து வந்த 12குடும்பங்களை சேர்;ந்த 51பேர் வெளிறே;றபட்டுள்ளதாக பொகவந்தலாவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் புதன் கிழமை இரவு இடம் பெற்றதாககாவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்த லயன்குடியிருப்புகளில் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் கருங்கற்களை கொண்டு கட்டபட்டலயன்குடியிருப்புகளில் உள்ள கருங்கற்கள் சரிந்து விழுந்துள்ளதோடு குடியிருப்பு பகுதி மெது மெதுவாக தாழ் இறங்கியுள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இந்த லயன் குடியிருப்பில் இரவு நேரங்களில் நித்திரை கொள்ளமுடியாத நிலமை காணப்படுவதாகவும் குடியிருப்புகளில் இருந்த உபகரணங்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்ட 51பேரும் உறவினர்கள் வீடுகளிலும் அயல் வீடுகளிலும் தங்கவைக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கபட்ட பகுதிக்கு சென்ற பொகவந்தலாவ காவல்துறையினர் பாதிக்கபட்ட மக்களை உடனடியாக வெளியேற்றியதுடன் மின்சாரத்தினை தடைசெய்துள்ளனர். கிராம உத்தியோகத்தர் மற்றும் தோட்ட முகாமைத்துவம் இணைந்து பாதிக்கபட்ட மக்களுக்கு மாற்று நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது
(எஸ். சதீஸ்)