20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ள ரோஜர் பெடரர் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மட்ரிட் ஓபனில் செம்மண் தரையில் விளையாடவுள்ளார். ஐரோப்பிய நாடுகளில் டென்னிஸ் தொடர்கள் செம்மண் தரையில் நடைபெறும் நிலையில் புல்தரை டென்னில் விளையாட்டில் ஜாம்பவானாக திகழ்ந்த பெடரர் செம்மண்ணில் பெரிய அளவில் சாதித்தது கிடையாது.
இதேவேளை போட்டி அட்டவணை அதிக அளவில் இருந்ததால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மட்ரிட் ஓபனில் பங்கேற்காத அவர் தற்போது பிரெஞ்ச் ஓபனை கருத்தில் கொண்டு மட்ரிட் ஓபனில் விளையாட முடிவு செய்துள்ளார். 20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ள ரோஜர் பெடரர் அதில் ஒருமுறை மட்டுமே பிரெஞ்ச் ஓபனை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
மட்ரிட் ஓபன் தொடர் மே 3ம் திகதியிலிருந்து முதல் 12ம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.