இலங்கை பிரதான செய்திகள் மலையகம்

காணாமல் போன இளைஞன் மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்பு

மஸ்கெலியா நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை(19.02.2019 )அன்று இரவு காணாமல் போன இளைஞன் இன்று (21.02.2019 ) காலை மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மஸ்கெலியா தபால் நிலையத்திற்கு அருகாமையில் வசிக்கும் 30 வயதுடைய பெத்தும் மதுசங்க லியனகே என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேற்படி இளைஞனை காணவில்லை என இளைஞனின் பெற்றோர் காவல்துறையில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய காவல்துறையினர் தேடுதல் பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில் மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்திற்கு அருகாமையில் இளைஞனின் பாதணி ஒன்று மீட்கப்பட்டிருந்தனையடுத்து குறித்த இளைஞன் நீர்தேகத்தில் பாய்ந்திருக்கலாம் என சந்தேகித்து தேடுதல் பணியில் ஈடுப்பட்ட நிலையில் இளைஞன் சடலமாக நீர்தேகத்திலிருந்து மீட்கப்பட்டார்.

செவ்வாய்க்கிழமை  இரவு குறித்த இளைஞனுக்கு வந்த தொலைபேசி அழைப்பை அடுத்து அவர் வெளியே சென்றதாகவும், அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை எவும் பெற்றோர்களால் காவல்நிலையத்தில் நிலையத்தில் முறைபாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டையடுத்து, குறித்தஇளைஞன் நீர்தேகத்தில் பாய்ந்துள்ளாரா அல்லது யாரேனும் தள்ளிவிட்டார்களா என்ற பல கோணங்களில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அட்டன் நீதவானின் மரண விசாரணைகளின் பின் சடலம் நாவலப்பிட்டி சட்ட மருத்துவ அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.