சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் 200 குடும்பங்களை பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சிரியாவில் ஐஎஸ் கட்டுப்பாட்டிலுள்ள உள்ள கடைசிப் பகுதியான இட்லிப் மாகாணத்தில் 200 குடும்பங்களை வெளியேற விடாமல் ஐஎஸ் தீவிரவாதிகள் பிடித்து வைத்துள்ளனர் என மனித உரிமை ஆணையகத்தின் உயரதிகாரி மிச்செல்லா தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை 10க்கும் மேற்பட்ட பாரவூர்திகள் முலம் பொதுமக்கள் ஐஎஸ் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த அவர் இந்த வாரம் மட்டும் 20 ஆயிரம் பேர் ஐஎஸ் பகுதியிலிருந்து மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.மேலும் சில குடும்பங்களை வரவிடமால் ஐஎஸ் தீவிரவாதிகள் தடுத்து வைத்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை இட்லிப் மாகாணத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்புத் தாக்குதலில் பெண்களும், குழந்தைகளும் உட்பட 24 பேர் உயிரிழந்துள்ளதுடன் 51 பேருக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது சிரியாவில் அரச படைகளுக்குனும் , ஐஎஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வரும் யுத்தம் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில் அவர்கள் வசமுள்ள பகுதிகளை மீட்க கூட்டுப்படையினர் இறுதிப் போரினை Nமுற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது